Monday 20 October 2014

(34) நடந்தாய் வாழி காவேரி

பயண நூல்கள் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அதுவும் நதிக்கரையில் பயணம் என்றால் சொல்ல வேண்டுமா? 'ஜீவன் லீலா ' எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். காகா கலேல்கர் இந்தியாவின் பல நதிக்கரைகள், நீர்  நிலைகள், நீர்வீழ்ச்சிகள் பற்றிய தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.

'நடந்தாய் வாழி காவேரி ' சிட்டி , தி.ஜானகிராமனால் காவேரிக்கரையில் பயணம் செய்து எழுதப்பட நூல். தலைக்காவேரி, சிவசமுத்திரம் , மைசூர், திருச்சி, கும்பகோணம் , பூம்புகார் போன்ற இடங்களில் பயணம் செய்து அந்த ஊர் கோயில்கள், முக்கிய நபர்கள் பற்றி எழுதியுள்ளார்கள். கண்ணகி, கோவலன் நடந்த பாதையால் செல்ல  நினைத்திருந்தாலும், அவர்களது முதல் பயண இடம் தலைக்காவேரி. இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்கும் காவேரி நதியிக்கரையில் பயணிக்கும் ஆசை தோன்றிவிடும் என்பது உறுதி.